செவ்வாய், ஜனவரி 13, 2009

பொங்குவோம் பொங்கலொன்று

இனமும் நிலமும் ஏற்றம்காண
எண்ணியபடியே எல்லாம் நடக்க
கடந்த ஆண்டை வழியனுப்பி
புதிய ஆண்டை வரவேற்று
தமிழினம்கூடி இறைவனை வேண்டி
பொங்குவோம் பொங்கலொன்று


சுதந்திரக் காற்றும் சமாதானப் பேச்சும்
ஈழமண்ணில் இன்றுமுதல் கிட்ட
சிறிய விதையை மண்ணில் பதித்து
பெரிய கதிராய் பூத்துக் குலுங்க
வேர்வை சிந்திய தோழர்கள் இணைந்து
தைத்திருநாளாம் தமிழர் நன்நாளில்
பொங்குவோம் பொங்கலொன்று

பழையன மறைந்து புதியவை தோன்ற
தீப்பந்தங்கள் அணைந்து தீபங்கள் ஏற்ற
ஆயுதங்கள் களைந்து அமைதி நிலவ
போர்க்குணம் அழிந்து பூவுலகம் மலர
பொங்குவோம் பொங்கலொன்று

கொட்டிலில் பயத்துடன் தாய்;
தொட்டிலில் பசியுடன் பிள்ளை
கொட்டும் மழையிலும் கோரப் பிடியிலும்
திக்கெட்டும் சிதறிய ஈழத்து உறவுகள்
தாய்மண்ணைக் காக்க தன்னுயிர் துறக்கும்
தமிழீழ வீரர்கள்
இவர்தம் நலம்வேண்டி
கண்ணிரண்டில் வெள்ளம் வழிந்தோட
பொங்குவோம் பொங்கலொன்று

தரணியெங்கும் இன்பம் பொங்கி
தூய்மை அன்பில் உள்ளம் மகிழ்ந்து
புயலும் பூகம்பமும் மண்ணோடு மடிந்து
அணைக்கும் கரங்கள் நன்றாய் பெரிகி
ஜெயிக்கும் மனிதன் தினமும் தோன்ற
பொங்கும் மனதுடன் பொங்கிடுவேன்
வார்த்தைகளில் பொங்கலொன்று
சௌந்தரி

4 கருத்துகள்:

  1. இனிய தமிழ்த் திருநாள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே!

    இந்த அந்நிய தேசத்திலே பொங்கல் என்று தெரியாமலே நண்பர்களின் வாழ்த்து கிடைத்தபின்பு இன்று பொங்கல் தினம் என்று அறிந்த நாட்களும் உண்டு. உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்தும் வாருங்கள்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அழகாகக் கவிதை புனைந்திருக்கிறீர்கள் பூபதி.உங்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  4. நன்றிகள் பல மனிமேகலா!
    உங்களது பாராட்டுக்கள் தான் தொடர் முயற்சியை ஊக்குவிக்கும். மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு