வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009

மீண்டும் சௌந்தரி


நட்பு வட்டடத்தை தொலைத்துவிட்டு தேடுவதென்பது சுலபமானதல்ல. தேடல் உள்ளவரை உயிர் வாழ்தலின் அவசியமும் தொடரும் என்பது உண்மையென்றால் என் தேடலும் தொடரும்.

எதைத் தேடுகின்றேன் எதைத் தொலைத்தேன் என்பது தெரியவில்லை ஆனாலும் ஏதோ ஒன்றைத் தேடுகின்றேன் என்பது மட்டும் புரிகின்றது.

அனுபவத்தின் நினைவுகள் யாவும் எப்போதும் சுமூகமாக ,ருப்பதில்லை அதற்கு நானும் விதிவிலக்கல்ல.

உடலை எரித்தோ புதைத்தோ விடலாம் ஆனால் மனசையும் அதில் அடங்கியுள்ள காயங்களையும் அதற்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் ரகசியங்களையும் என்ன செய்யமுடியும்.

ஆனாலும் வாழ்தலை நிச்சயித்து தேடலை ஆரம்பிப்பதுதானே யதார்த்தம். தேடியதை அடைந்தவர்கள் உண்டோ என்ற கேள்வி இருப்பினும் மீண்டும் என் எழுத்துக்களுடன் சங்கமம்

முகம் தெரியாத உறவுகளுடன் உருவாகும் நட்புவட்டம் இனிமையானது, நிஐத்தில் காணமுடியாத ஆத்மார்த்தமான அன்பின் பெருமையை கற்பனையில் உருவாக்கித்தரும் உறவுகள் இனிமையானவை.

வாழ்க்கையில் எத்தனை துன்பங்களைச் சந்தித்ததாலும் நிலைகுலையாத நட்பைக் காணமுடியுமா?  இதை நிஐவாழ்க்கையில் நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்களா? எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட நல்ல நட்பை அனுபவித்ததுண்டா?

தொடர்ந்து எழுதும்வரை…………

4 கருத்துகள்:

 1. எனக்கு நட்பு எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு கிடைத்துள்ளது நண்பரே !

  பதிலளிநீக்கு
 2. வரவுக்கு வாழ்த்துக்கள் செளந்தரி! மீண்டும் காணாமல் போய் விடாதீர்கள்.

  //முகம் தெரியாத உறவுகளுடன் உருவாகும் நட்புவட்டம் இனிமையானது, நிஐத்தில் காணமுடியாத ஆத்மார்த்தமான அன்பின் பெருமையை கற்பனையில் உருவாக்கித்தரும் உறவுகள் இனிமையானவை//

  அப்படியென்றால் இதை விட்டு விட்டுப் போனது ஏன்?

  உங்களோடு நான் கோபம்!!

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜமால்!
  முடியவில்லை ஜமால் உங்களைப் போல் என்னால் சொல்ல முடியவில்லை
  எனது விரல் என்னை நோக்கியே சுட்டுகின்றது.

  பதிலளிநீக்கு
 4. உங்களால் என்னை கோவிக்க முடியாது மணிமேகலா. அதுதான் நட்பு
  வாழ்வின் எல்லைவரை தொடரும்

  பதிலளிநீக்கு