செவ்வாய், பிப்ரவரி 03, 2009

தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள்


இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்த திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி இன்று காலை மரணமடைந்தார். தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள் , அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆழ்த்த அனுதாபங்கள்.

உறவுகளே .... ரவியின் தீக்குளிப்பு இறுதியானதாக இருக்கட்டும். தயவு செய்து இப்படி உயிரைவிடாதீர்கள். உங்களது விலைமதிப்பற்ற உயிரை அழிப்பற்கு கொண்டுள்ள மனத்திடத்தை ஆக்கபூர்வமான வழிகளில் பாவிக்கலாம். அநீதியை எதிர்த்து போராட வேறுவழிகள் நிறைய உண்டு. அவற்றை கண்டுபிடித்து செயல்படுங்கள்.

இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்த ஓர் தமிழனை வாய் கூசாமல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக இவரின் தியாக மரணத்தை திசைதிருப்ப தமிழக காவல் துறை முயன்றுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. ஒரு உயிரின் மதிப்பை பார்த்தீர்களா?

தமிழக சுயநலவாத அரசியல்வாதிகளையும் மத்திய அரசையும் எரிப்பதற்கு எத்தனை உயிர்கள் எரிந்தாலும் ஒன்றும் நடக்காது. அவர்களை மாற்றுவதற்காக நீங்கள் உடல்களில் தீயை பற்ற வைக்காதீர்கள். மக்கள் மனங்களில் கருத்துக்களில் செயற்பாடுகளில் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் கபட நாடகம் போடும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புங்கள்.

ரவி அவர்கள் ஈழத்தின் மீதிருந்த பற்றுக் காரண்மாகவே தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருந்தார். இவரது உயிர் கொடைக்கு கிடைத்த பரிசை பாருங்கள். கொதித்து எழும்பும் எதிர்ப்பலையை திசைதிருப்ப கபட அரசியல்வாதிகளினால் சோடிக்கப்பட்ட களங்கமிது.

உறவுகளே பெறுமதியான் உங்கள் உயிரை வீணாக்காதீர்கள். இந்த உலகில் இருந்து இன்னும் எவ்வளோவோ உங்களால் சாதிக்க முடியும். உங்கள் வீர மரணம்கூட களங்க படுத்த படலாம் உணர்ச்சி வசப்பட்டு உயிரைப் பலிகொடுகாதீர்கள். வீரர்களின் சாவு சரித்திரமாக வேண்டும் அதற்காக உழையுங்கள்! தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் மனிதர்கள் வாழும் உலகமிது
சிந்தியுங்கள்!

தமிழர்கள் அனைவரும் இணைந்து பகைவர்கள் யாராயினும் அவர்களை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள் என்று இன்னும் ஏன் புரியவில்லை இந்த இந்திய அரசுக்கு. ஈழத் தமிழனுக்கு, சொந்தச் சகோதரனாய், இரத்த உறவுக்காரனாய் தமிழகத்துத் தமிழன் தோள் கொடுத்து நிற்கின்றான் என்பது இன்னுமா இந்திய தலைவிக்கு புரியவில்லை. நாளாந்தம் குண்டுவிச்சுக்கும், எறிகணை வீச்சுக்கும் இலக்காகிப் பலியாகும் அவலம் இனியும் தொடர வேண்டாம் எனத் ஈழத் தமிழர்களுக்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் தமிழக தமிழர்களைப் பார்த்தாவது எதை எப்போது எதிர்க்க வேண்டும்;எப்போது ஆதரிக்கவேண்டும் என்பதில் ஓர் தெளிவை மற்றவர்கள் ஏறபடுத்திக்கொள்ளவேண்டும். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு!

7 கருத்துகள்:

 1. ம்...தியாகங்களைப் பொசுக்கத்தான் தீயவர்கள் முயற்சி செய்கீனம்..இது தான் காலம்...

  பதிலளிநீக்கு
 2. சக்கடத்தார் வணக்கம்!

  தீயவர்கள் வாழும் உலகமிது அதனால் எந்தக் காரியத்தை செய்யவதற்கு முதல் அதற்கான காரணத்தையும் விளைவுகளையும் சிந்தித்து செயல்படவேண்டும். இந்த உபதேசம் ஊருக்குதான் பொருந்தும். அறிவைவிட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நானும் விதிவிலக்கல்ல.

  பதிலளிநீக்கு
 3. BOOPATHY said...
  well done sakkadaththar, ஓ உங்களுக்கு ஆங்கிலத்திலை எழுதினால் பிடிக்காது. தெரியுது வடமராச்சி என்று . . ..இது பிரதேசவாதமில்லை; பேசத் தெரிந்தவன்.
  எல்லாருக்கும் ஒரு நாள் 24 மணித்தியாலம்தான் சக்கடத்தாருக்கு மட்டும் எப்படி 48 ஆனது. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்//

  எனக்கு ஆங்கிலம் பிடிக்காதென்டில்லை.. ஆனால் என்ன பாருமப்பு....இஞ்சை புலத்திலை பிறெஞ்சு, டொச்சு...டெனிஸ், ஸ்பானிஸ் என்று ஊருப்பட்ட மொழி பேசுறவைக்கு உந்த ஆங்கிலிஸ் தெரியாது தானே?? அதான் ஆங்கிலம் வேண்டாம் தமிழிலை போட்டுத் தாக்கச் சொன்னன். அவையளும் பாவம் தானே? அதேன்ன நேரக் கணிப்பெல்லாம் சொல்லுறீர்?? ஏதாவது புரியிற மாதிரிச் சொல்லுங்கோவன் மோனை??

  பதிலளிநீக்கு
 4. தியாகங்கள் மூலம் காலத்தைக் கழிப்பது தான் ஒவ்வோர் தமிழனின் வாழ்வாகி மாறி விட்டது. எங்கள் வாழ்வில் இனி எப்போது வசந்தம் வருமோ??? எங்கள் தமிழினத்துக்கு விடிவே இல்லையா??
  தொடருங்கோ.....

  பதிலளிநீக்கு
 5. வாருங்கள் கமல்,
  //தியாகங்கள் மூலம் காலத்தைக் கழிப்பது தான் ஒவ்வோர் தமிழனின் வாழ்வாகி மாறி விட்டது//
  நீங்கள் கூறுவது சில தமிழருக்கு பொருந்தாது. ஒரு சில அவல அவமானச் சின்னங்கள் எமது இனத்திலும் இருக்கினம். இனத் துரோகியாகி சிங்களத்தின் வருடிகளாக துடிக்கும் எத்தனை பேர் தமிழ் வரலாற்றில் இருக்கினம். செத்துக் கொண்டிருக்கும் தமிழினத்தின் அழுகுரல் ஓலமெல்லாம் இந்த துரோகிகளைத்தான் சேரும்!

  பதிலளிநீக்கு
 6. வாருங்கோ சங்கடத்தார்!

  அரக்கத்தனத்தின் கொலைவெறியாட்டம் நடக்குது ஈழமண்ணிலை, உயிரிழப்புகள் பற்றி கணக்கெடுக்கமுடியவில்லையாம். சர்வதேசமும் எங்களை கணக்கெடுக்கப்போவதில்லை. அவயின்ரை குரல்கூட ஒருபக்கமாத்தான் கேக்குது. அதயும் மீறி முகத்துக்கு நேரே கத்தினாலும் அந்தக் குரலை சிறீலங்கா அரசு மதிக்கப்போவதில்லை. இதுக்கெல்லாம் என்னதான் முடிவு?

  பதிலளிநீக்கு
 7. இனிமேலையும் உயிரிழப்பு வேண்டாம். அவர் குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் எமது ஆறுதலை சொல்லிக் கொள்வோம்.

  பதிலளிநீக்கு