சனி, ஜனவரி 24, 2009

எல்லோரும் சமமானவர்களே!

சௌந்தரி
அபியும் நானும் என்ற படம் பார்த்தபோது ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜை அவரது மனைவி வயதான பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்ளும்படி கூற அவர் செய்கையால் மறுப்பு தெரிவிப்பார். மனைவி தொடர்ந்து வற்புறுத்த வேண்டாவெறுப்பாக குனிகிறார். இந்தக் காட்சியை பார்த்ததும் எனது மனதில் நீண்ட காலமாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. அதையே இன்று எழுதுவோம் என்று யோசித்தேன்.


ஊரில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலும்கூட பல வைபவங்களில் மனிதர்களின் கால்களில் மனிதர்கள் விழுவதை காணக்கூடியதாக இருகின்றது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் வந்துகொண்டு இருகின்றது. திருமண நிகழ்வுகளில் பல நூறு பேர் பார்த்துக் கொண்டிருக்க பெற்றவர்கள் கால்களில் மட்டுமல்லாது மற்ற உறவுக்காரர்கள் கால்களில் விழுவது, அரசியல் மேடைகளில் தலைவன், தலைவியின் காலில் விழுவது, கோயில்களில் பெரிய ஐயர், ஆசிரமங்களில் மகான் போன்றவர்கள் கால்களில் விழுவது என்று இன்னும் பல.

ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைவிட எந்த வகையிலும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் துறையில் தனித்திறமைகள் இருக்கின்றது. அந்த வகையில் பார்த்தால் எல்லோரும் சமமானவர்களே. என்னை பொறுத்தவரையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவதென்பது அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் ஒரு செயலாகும்.

பெற்றவர்கள் காலில் விழுவது அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்று சொன்னாலும் மரியாதையை வெளிக்காட்டுவதட்கு இது ஒன்றுதானா வழி. மரியாதை என்பது மனசில் இருக்கவேண்டும் மற்றும் செயலில் இருக்கவேண்டும் வெறும் வாய்சொல்லிலோ காலில் விழுந்து வழிபடுதலிலோ மட்டும் இருந்தால் போதாது. பெரியவர்களது அறிவுரைகள், அவர்களது அனுபவதேர்ச்சி போன்றவற்றை முன்னுதாரணமாக ஏற்று வாழ்வதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதைதான்.

பொதுவாக குழந்தைகளை மற்றவர்கள் கால்களில் விழுந்து வணங்கும்படி சொல்வது மிகவும் நெருடலானது. பெரியவர்களிடம் அன்பு செலுத்து, அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்கேட்டு நட என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களே வீட்டில் விறகு கொத்த வரும் வேற்று ஜாதியைச் சேர்ந்த வயோதிபர் கதிர்காமுவை கதிர்காமன் என்று கூப்பிட சொல்வார்கள், உடுப்புத் துவைக்கும் மாணிக்கம் என்ற வயதான பெண்மணியை தொட்டுப் பேச அனுமதிக்க மாட்டர்கள், பாட்டி வயதை ஒத்த அவரையும் மாணிக்கம் என்றே அறிமுகப் படுத்துவார்கள்.

இப்படியாக குழந்தைகளுக்கு பல முரண்பாடுகளை வீட்டுக்குள்ளேயே உருவாக்கும் பெரியவர்கள் அவர்களை மற்றவர்கள் கால்களில் விழச் சொல்வது தன்னம்பிக்கைக்கு எதிராக அவர்களை தூண்டுவது போல்தான் தோன்றுகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகமாகக் காணக் கூடியதாக இருக்கிறது.

யாருடைய நம்பிக்கைகளையும் குறை கூறும் நோக்கம் எதுவும் இங்கு இல்லை. மனதில் தோன்றிய சிந்தனையின் வெளிப்பாடு மட்டும்தான். உங்களது பக்க நியாங்களையும் முன் வையுங்கள் ஆரோக்கியமான கருத்துக்களமாக அமையட்டும்.

13 கருத்துகள்:

  1. மரியாதையை
    மனத்தில் இருந்தால் போதுமே
    வெட்ட வெளிச்சம் போட்டுக் கட்ட வேண்டியதில்லையே

    இது என்னுடைய கருத்து தான்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா1/25/2009 1:02 AM

    காலில் விழுவதற்கும், காலைத் தொட்டு வணங்குவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மாதா, பிதா, குரு, தெய்வம் முதலானோரின் காலைத் தொட்டு வணங்குவது மரியாதை நிமித்தம் மட்டுமன்றி அவர்களுடைய ஆசியை வேண்டி என்பது தான் முக்கியமானது.வயதுக்கு மூத்தோர் காலைத் தொட்டு வணங்குவது மரியாதைக்காக என்று சொல்ல்லலாம். இவ்வ்வணக்க முறை இந்தியக் கலாசாரத்தில் தொன்று தொட்டே இருந்து வருகிறது. புலம் பெயர்ந்த ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஒரு மரபைக் கைவிட முடியுமா?
    நீங்கள் குறிப்பிட்ட திரைப்படத்தில் கதாநாயகன் குனிந்து காலைத் தொட மறுப்பது தனது இறுக்கமான உடையின் காரணமாக என்று நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வாருங்கள் திகள்மிளிர் உங்களது கருத்தைத்தான் நானும் நடைமுறைப் படுத்துகிறேன். என்னால் முடியவில்லை என்பதனால் நடைமுறை வழக்கத்தை குறை கூறவில்லை. இதைப்பற்றி மேலும் சிந்திக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. //இந்தியக் கலாசாரத்தில் தொன்று தொட்டே இருந்து வருகிறது. புலம் பெயர்ந்த ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஒரு மரபைக் கைவிட முடியுமா?//
    சரியான பதில். எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஓர் மரபு மாறிவிடுமா என்ன?
    //....முதலானோரின் காலைத் தொட்டு வணங்குவது மரியாதை நிமித்தம் மட்டுமன்றி அவர்களுடைய ஆசியை வேண்டி என்பது தான்
    முக்கியமானது//
    ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால் காலைத் தொட்டு வணங்காதவர்களைக்கூட பெரியவர்கள் முழு மனசோடு ஆசீர்வதிப்பர்கள் என்றும் நான் நம்புகின்றேன்

    பதிலளிநீக்கு
  5. தன்னை விட மூத்தவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதை தவறாக நினைக்கவில்லை..ஆனால் அது விருப்பபட்டு அமைய வேண்டுமே தவிர ,சம்பிரயாதத்திற்காக இருக்க கூடாது என்பது என் கருத்து...நிறைய விழாக்களில் ஒருவர் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டால் போதும்...வரிசையாக விழுவார்கள்..எங்கே நம்ம விலாவிட்டால் தப்பா நினைத்துவிடுவோறோ என்று....அதுதான் எரிச்சல உண்டாக்கும்....

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்வதும் சரிதான்.

    ஆனால்,நாம் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஒருவரிடம் அவரது ஆசி வேண்டிப் பணிவதில் ஆசிகளை நாம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் இல்லையா சகோதரி?

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் வளர்பிறை
    //..விருப்பபட்டு அமைய வேண்டுமே தவிர ,சம்பிரயாதத்திற்காக இருக்க கூடாது//
    ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துதான். ஏன் எதற்காக என்ற கேள்விகளே இல்லாமல் தொடரும் கூடங்கள்தான் அதிகம் இதில் படித்தவர் படிக்காதவர் என்று யாபேரும் அடங்குவர். வருகைக்கு நன்றி மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு
  8. வாருங்கள் மணிமேகலா!
    //...ஆசிகளை நாம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்....//
    உண்மைதான் பணிவு என்பது எந்த ரூபத்திலும் வெளிபடலாம் அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. ஒவ்வொரு பின்னோட்டங்களிலும் எத்தனை அழகான கருத்துக்கள் பார்த்தீர்களா.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா2/04/2009 10:32 AM

    Hii,
    he didnt like the family so he didnt want to get blessed from her. That is different. We never touch our parents leg for blessing. But, we dont comment on others action. I think people should do what they want to do.

    Just because a custom is ancient, it does not have to be right. but its fine if their action does not bother others.

    பதிலளிநீக்கு
  10. Triumph, thanks for coming. //I think people should do what they want to do// mmmm...I am sorry this does not look right to me. I think people should learn to do the right thing....
    சடங்கு சம்பிரதாயங்களை ஏன் எதற்கு என்று புரியாமலே ஒருவர் செய்வதால் மற்றவர் பின்பற்றுகின்ற முறைதான் அதிகம். அறிவு பூர்வமாக சிந்திக்கும் சமூகம்தான் அரோக்கியமாக இருக்கும். கூர்மையான சிந்தனை உங்களது அதை ஏன் தமிழில் சிந்திக்கக் கூடாது. நன்றி மீண்டும் வருக

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா2/04/2009 8:33 PM

    Hi,
    I take ages to type in Tamil. I would love to type in Tamil. But, due to lack of time I end up typing in English.

    //People should learn to do the right thing//
    Few things are hard to be defined as right or wrong. I think we dont need to do lot research to do things like touching elders legs.

    Being a person from north, we dont have to think anything unnecessarily. We truly love others and be honest to ourselves. we believe in doing want we want to do but also concern that it should not bother others.

    No offense. I would rather spend my time on researching something else than researching abt touching legs & getting blessing.

    I do feel awkward when politicians fall on everyone's legs...That is low on them. We cant compare that when we touch (WE DONT FALL LIKE POLITICIANS - Its touching) our parents and teachers legs for blessing...

    பதிலளிநீக்கு
  12. Thanks for coming Triumph
    //I would rather spend my time on researching something else than researching abt touching legs & getting blessing//
    I don't thing i am wasting my time on my writing pleasure...as something I love to & I would love to hear other people's honest opinions on how they feel.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா2/05/2009 3:39 PM

    Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    பதிலளிநீக்கு