கடந்த சில நாட்களாக எழுதியதைவிட வாசித்ததே அதிகம். எங்கு பார்த்தாலும் வலியுடன்கூடிய வார்த்தைகள். இதற்குள் நான் எழுதி எதை சாதிக்கப் போகின்றேன் என்ற சிந்தனை வேறு.
எங்கு பார்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டம், பரப்புரை வடிவங்கள், தீக்குளிப்பு உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என்று எல்லாவிதமான போராட்ட வடிவங்களையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கும் தமது உறவுகளை மீட்டெடுக்க ஆயுதமாக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் எதற்கும் அஞ்சாது தமிழரை அழிப்பதே எமது கடமை என்று தாயகத்தில் நாள்தோறும் சிறிலங்கா இராணுவம் அப்பாவி மக்களை கொன்று தீர்த்த வண்ணமே இருக்கின்றது. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரக் கொலைகள், ஊனங்கள் என்று வார்த்தைகளில் கூறமுடியாத சோகங்கள்.
எங்கு பார்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டம், பரப்புரை வடிவங்கள், தீக்குளிப்பு உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என்று எல்லாவிதமான போராட்ட வடிவங்களையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கும் தமது உறவுகளை மீட்டெடுக்க ஆயுதமாக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் எதற்கும் அஞ்சாது தமிழரை அழிப்பதே எமது கடமை என்று தாயகத்தில் நாள்தோறும் சிறிலங்கா இராணுவம் அப்பாவி மக்களை கொன்று தீர்த்த வண்ணமே இருக்கின்றது. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரக் கொலைகள், ஊனங்கள் என்று வார்த்தைகளில் கூறமுடியாத சோகங்கள்.
நவஜோதி ஜோகரட்னம் எழுத்தில் வந்த கவிதை ஒன்றை வாசித்தேன். கசக்கின்றது காலம் என்ற வரிகளுக்குள் எல்லாமே அடங்கும்.
குத்தும் குளிரிலும் - என்
குருதி மிதமான சூடு
உரிமையிழந்த மண்ணின்கோலம்
பார்வையில் படியும்போது
உடல் இறுகி உதிரம் உறைகிறது
சரித்திர வட்டத்தில்
நெருப்பு இடி பூகம்ப வெடிகள்…
மூடாத குழிகளில்
அம்மா அப்பா மட்டுமன்றி
ஐயோ எம்
எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்
சிதறிப் போய்க்கிடக்கிறது…
இளவேனில் மழைத்தூறல்
சிவப்பாகி பெருக்கெடுக்கிறது…
இரும்பு இதயங்களின் வேற்றுமை படர்ந்து
மண்ணும் வெடுக்கெடுக்கிறது…
இனவாதச் சகதிக்குள் மனிதக் கருகல்கள்…
மனிதத்துக்குக் கண்ணீர் அஞ்சலி!
நாமோ மண் எங்கும் ஓடுகின்றோம்…
கனத்து கரைந்து கசக்கிறது காலம்…
எரிகிறது இதயம்…
ஒளி செத்த தேசம்…
சிவப்பாகும் கோபம் உங்களை திரட்டி விழுங்காதா? – எம்
குருதியைச் சீராக்கி
சிரிப்பைக் கண்டெடுத்து
சுதந்திரம் விரைந்து விரைவில்
மாலைகளாய் எம்
கழுத்தில் வீழாதா?...
மூடாத குழிகளில்
பதிலளிநீக்குஅம்மா அப்பா மட்டுமன்றி
ஐயோ எம்
எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்
சிதறிப் போய்க்கிடக்கிறது…//
கவிதை மனதைக் கருக்குகிறது. வாழ்வினைத் தொலைத்து விட்டு வாழ்க்கையைத் தேடுபவர்கள் எப்போது வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ளப் போகின்றார்களோ? எல்லாமே கேள்விக் குறியாய் உள்ளன,
Hi
பதிலளிநீக்குஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
என்ன சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை,
பதிலளிநீக்குஇவ்வளவு தண்டிக்கப் பட்ட சமூகமா நாம்!
வணக்கம் பிள்ளை பூபதி! எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே? உம்மடை பக்கத்துக்கு உடன வர ஏலாமல் போயிட்டு. மன்னிக்கோணும். நல்ல கவிதை. அருமையாயிருக்கு மோனை, கவிதை எழுதின பிள்ளைக்கு என்ட வாழ்த்தைச் சொல்லி விடும். விரைவிலை சுதந்திரம் கிடைக்கும் என்பது எங்கடை அசைக்க முடியாத நம்பிக்கை மோனை? எனக்கும் சாக முதல் ஒருக்கால் ஊருக்குப் போக வேணும் எண்டு தான் ஆசை. பொடியள் அடிப்பீனம் மோனை...வெற்றி எப்பவுமே நீதியின்டை பக்கம் தான்? அப்ப நான் வரட்டே??
பதிலளிநீக்குIt's lament of a loser. Terror supporters like you start crying over spilt milk.It's so obvious terror is defeated & the Tamil people are really happy about it.
பதிலளிநீக்குவாருங்கள் கமல்;
பதிலளிநீக்குபோரினால் ஏற்படும் இழப்புகள் பற்றிய விபரங்கள் சரியாக தெரியப் படுத்தப் படவில்லையா? அல்லது பரப்படுகின்ற பொய்ப்பரப்புரைகளை நம்பி பாராமுகமாக இருகின்றர்களா?
நன்றி காரூரன்; உலகத்தின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்புவதற்கு சரியான வழியில் செயல்படவில்லையோ என்ற கேள்விதான் எழுகின்றது? ஆனால் அதைப்பற்றி சிந்திக்கும் தருணம் இதுவல்ல.
பதிலளிநீக்குவாருங்கள் சக்கடத்தார்,
பதிலளிநீக்குதாய் நிலத்தில் வாழ்கையே போராட்டமாக மாறிவிட்ட இந்த நேரத்திலும் வெற்றி நீதியின் பக்கம்தான் என்ற உங்கள் நம்பிக்கை அவர்களது வலிகளைக்கூட வலிமையாக்கி விடும்
பெயரில்லாதவரே வாருங்கள்,
பதிலளிநீக்குயார்மீது உங்களுக்கு கோபம். எமது மண்ணை அபகரித்து, தமிழ் மக்களைப் பல்லாயிரக் கணக்கில் இடம்பெயர்த்து, என்னையும் உங்களையும் அகதிகளாக்கி அழித்தொழித்த வண்ணம் இருகின்ற பேரினப் பயங்கரவாதம் உங்களது கண்களுக்கு தெரியவில்லையா?